வாலாஜாபாத் அருகே கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு - ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 2522

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

வையாவூர், காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து நத்தப்பேட்டை ஏரி, வையாவூர் ஏரி மற்றும் குடிநீர் ஆதாரத்திலும் கலந்தாக கூறப்படும் நிலையில் கிராம மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் காமாட்சி நகரை சேர்ந்த அரசு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments