பிரதமர் மோடியின் ஆட்சியில் தடுப்பூசிகளுக்கு உடனடி அங்கீகாரம் - சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா
முன்பு தடுப்பூசிகளை உருவாக்கினால் அதற்கு அங்கீகாரம் அளிக்க 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் தடுப்பூசி ஆய்வுகள் குறைவாக இருந்த தாகவும், பிரதமர் மோடி அந்த நடைமுறையை மாற்றியதால் ஓராண்டுக்குள் கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் குறைவாக, 10 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்தியாவில் தொற்று எற்பட்டதாவும், இறப்பு எண்ணிக்கையும் 10 லட்சத்திற்கு 340 என்ற குறைவான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுவரை 3 கோடியே 46 லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் மட்டுமே அதற்கு பலியானதாகவும் இது மொத்த தொற்று எண்ணிக்கையில் இது ஒன்று புள்ளி 36 சதவிகிதம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
Comments