ஒமிக்ரான் தொற்று எதிரொலி... கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதி

0 4461

கர்நாடகத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் எதிரொலியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இருமாநில எல்லையான சூசூவாடியில் நலவாழ்வுத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் கர்நாடகத்தில் இருந்து வரும் அனைவருக்கும் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைச் சோதித்து அறிகின்றனர்.

வாகனங்களை நிறுத்திப் பரிசோதித்து அனுமதிக்க நேரமாவதால் எல்லைப் பகுதியில் வாகனங்கள் நெடுந்தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments