உ.பி.யில் போர்விமானத்தின் சக்கரத்தை திருடிய மர்மநபர்கள்

0 3531
உத்தர பிரதேச மாநிலத்தில் விமானப் படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமானத்தின் சக்கரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் விமானப் படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமானத்தின் சக்கரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

லக்னோ மாவட்டத்தில் உள்ள பக்சி கா தலாப் விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூரில் உள்ள விமானப் படைத் தளத்திற்கு லாரி மூலம் ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், லக்னோ அருகே ஷாஹித் வழித்தடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அதை பயன்படுத்திய காரில் வந்த மர்ம நபர்கள் லாரியில் இருந்த மிரேஜ் 2000 ரக போர் விமானத்தின் சக்கரத்தை திருடிச்சென்றதாகவும் ஓட்டுநர் ஹேம்சிங் ராவத் கூறினார்.

இது தொடர்பாக தெரிவித்த காவல்துறையினர், லாரியில் போர்விமானத்தின் 5 சக்கரங்கள் இருந்த நிலையில் அதில் ஒன்று திருடப்பட்டதாகவும், தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments