பாடம் நடத்தும் போது ஆபாச பேச்சு... அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

0 5875

கரூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர், மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பன்னீர் செல்வம் என்ற அந்த அறிவியல் ஆசிரியர், இருபாலர்கள் பயிலும் வகுப்பறையில் பாடங்களை எடுக்கும் போது கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, மாணவ, மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments