ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்
ப்ளீச்சிங் பவுடரை தவறுதலாக உட்கொண்டு எலும்பு தோலுமாக மாறிய தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சிறுமி இசக்கியம்மாள் தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில், இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
உணவுக்குழாயில் ஏற்பட்ட பாதிப்பால், உணவு உட்கொள்ளமுடியாமல், உடல் நலிவடைந்து தவித்து வந்த ஐந்து வயதேயான சிறுமி இசக்கியம்மாளின் நிலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக உடல்நலம் தேறிவந்துள்ளார்.
இந்நிலையில், தன் தந்தை சீதாராஜ், தாயார் பிரேமா ஆகியோர் உடன் தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வரை சந்தித்து சிறுமி நன்றி தெரிவித்தபோது, சிறுமியின் தொடர்சிகிச்சைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை சிறுமியிடம் முதல்வர் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் சிகிச்சைக்காக தந்தை உதவிக்கரம் நீட்டிய ஒவ்வொருவருக்கும் சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்தார்.
Comments