300 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரம் அளவிலான குறுங்கோள்... வருகிற 11 ஆம் தேதி பூமிக்கு அருகில் கடந்து போகும் என நாசா தகவல்
300 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் அளவிலான குறுங்கோள் ஒன்று வரும் 11 ஆம் தேதி பூமிக்கு அருகில் கடந்து போகும் என நாசா தெரிவித்துள்ளது.
4660 நெரியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் 330 மீட்டர் சுற்றளவு கொண்டது என்றும் பூமியில் இருந்து சுமார் 39 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இது பூமியை கடக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து சென்றாலும் புவியீர்ப்பு மண்டலத்திற்குள் அது நுழையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தூரத்தில் பூமியை கடந்து சென்றாலும், அது பூமிக்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறுங்கோள் கடந்த 1982 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனை ஒன்று புள்ளி எட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுவதால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்கிறது.
Comments