மணி ஹெய்ஸ்ட் - ஐந்தாவது சீசனின் 2-ம் பாகம் வெளியீடு

0 5254

உலக அளவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள "லா காசா டி பேப்பல்" என்று அழைக்கப்படும் "மணி ஹெய்ஸ்ட்  வெப் தொடரின் ஐந்தாவது சீசனின் 2ஆம் பாகத்திற்குரிய 5 எபிசோடுகள் NETFLIX இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான 5 ஆவது சீசனின் முதல் பாகம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இம்மாதம் வெளியாகியுள்ள ஐந்தாவது சீசன் 2ஆம் பாகத்துடன் தொடர் முடிவடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபலமான கதாபாத்திரம் பெர்லினை மையமாகக் கொண்ட "பெர்லின் ஸ்பின்-ஆஃப்"' என்ற தலைப்பில், 2023-ல் புதிய வெப் தொடர் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் நடிகர் பெட்ரோ அலோன்சோ மீண்டும் பெர்லின் வேடத்தில் நடிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments