விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்-க்கு பதிலாக பயணிகளின் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அனுமதி

0 3688

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவின் 4 விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்-க்கு பதிலாக முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி, பூனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் பையோமெட்ரிக் போர்டிங் நடைமுறை மூலம் பயணிகள் விமானப் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை  NEC Corporation நிறுவனத்திடம்  இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியுள்ள நிலையில், படிப்படியாக நாட்டின் மற்ற விமான நிலையங்களுக்கும் பையோமெட்ரிக் போர்டிங் முறை விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments