அடுத்த ஆண்டு முதல் கார் விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி அறிவிப்பு

0 3999

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி , அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மூலப் பொருட்களான எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் வேறு வழியில்லாமல் கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக மாருதி சுசுகி  நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் Shashank Srivastava தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவலை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிடவில்லை. இந்த ஆண்டில் ஏற்கனவே 4.9 சதவீதம் வரை கார் விலையை மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments