தமிழகத்தில் விரைவில் சைகோவ்-டி தடுப்பூசி அறிமுகம்

0 5226

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்திவரும் நிலையில் மூன்றாவதாக சைகோவ்-டி தடுப்பூசி 7 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் சைடஸ் கேடிலா நிறுவனம் மத்திய அரசிடம் தடுப்பூசியை வழங்க உள்ள நிலையில் தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செலுத்தப்பட உள்ளது.

28 நாட்கள் இடைவெளியில் 3 டோஸ்களாக செலுத்தப்பட உள்ள சைகோவ் டி தடுப்பூசியின் 11 லட்சத்து 60 ஆயிரம் டோஸ்கள் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments