விமான நிலையக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற்றது மகாராஷ்ட்ரா அரசு
விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மகாராஷ்ட்ரா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
மத்திய அரசின் வழிகாட்டலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் மாநில அரசுஅறிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவுகிற செய்தி வெளியானதில் இருந்து மாநில அரசுகள் தனித்தனியாக விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளை விதித்தன. உள்நாட்டுப் பயணிகளுக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் , கொரோனா பரிசோதனை போன்றவை கட்டாயமாக்கப்பட்டன.
இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட 12 நாடுகளின் பயணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் படி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி தடுப்பூசி போடாதவர்கள், ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற தடையில்லை.
Comments