சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இ- சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி!

0 2649

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இ சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. இதன் படி Google pay வழியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும். இதற்காக  சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் QR code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் 94959-99919 என்ற எண் மூலம் google pay வழியாக காணிக்கை செலுத்த முடியும். இதே போல சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த QR Code போர்டு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments