கவராத்தி தீவு அருகே கப்பலில் பயங்கரத் தீ விபத்து... 700க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு

0 2414

லட்சத்தீவு கடல்பகுதியில் கவராத்தி தீவுக்கு சென்றுகொண்டிருந்த எம்.வி. கவராத்தி என்ற பயணிகள் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கடலோரக் காவல்படையினர் விரைந்து செயல்பட்டு கப்பலில் இருந்த 624 பயணிகளையும் 85 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பலின் எஞ்சின் தீயால் சேதம் அடைந்து கப்பல் இயக்கமுடியாத நிலையில் இருந்ததால் சமர்த் கப்பல் மூலமாக இழுத்துச் செல்லப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments