இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் கிரிக்கெட்.... கோலி தலைமையில் டெஸ்டைக் கைப்பற்றுமா இந்திய அணி?

0 4827

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளார். முதல் போட்டி டிராவில் முடிந்ததால் 2-வது ஆட்டத்தை வென்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.

அதேநேரம் டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி 2-வது டெஸ்ட்டை கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்ப முயற்சிக்கும். ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பின் மும்பை மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments