நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன்
நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்துள்ள போரூர் ஏரி மற்றும் அதனருகே மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்தில் அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தலையாய கடமையாக ஏற்று வெள்ளம் வடிய வடிய ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாகத் தெரிவித்தார்.
Comments