திருப்பூர் மாவட்டம் அகரம் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அகரம் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தில் கொரோனா பரவல் வேகமெடுப்பதால், அனைத்து பகுதிகளிலும் பரிசோதனை எண்ணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 27ஆம் தேதி அகரம் பள்ளியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments