உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் - தமிழக டிஜிபியிடம் அதிமுக சார்பில் புகார்

0 7834

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது குறித்து, அதிமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக, ஓரிரு நாட்களுக்கு முன்பு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணனும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது உண்மை அல்ல என அதிமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments