நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

0 6967

மழை, வெள்ள பாதிப்புகளை குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

மழைவெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படவில்லை. திமுக அரசு தன்மீது உள்ள தவறை மறைக்க அதிமுக மீது குறை சொல்லக்கூடாது. பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு தயார். ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் 60 ரூபாய்கு கீழ் வரும்.

தமிழ் புத்தாண்டு விவகாரத்தில் திமுக அரசு மக்களை குழப்புகிறது. வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்புத்தாண்டு தேதியை கையில் எடுத்துள்ளனர். 

தொடர்ந்து, பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் எனவும், அதிமுக - பா.ஜ.க. கூட்டணி எந்த குழப்பமும் இல்லாமல் நீடிக்கிறது எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments