20,000 கி.மீ., சோதனை ஓட்டம் நிறைவு... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி எப்போது?
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 pro ஸ்கூட்டர்களின் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், ஆயிரம் நகரங்களில் மேலும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு இந்தியாவில் செய்யப்பட்ட மிகப் பெரிய அளவிலான சோதனை இது என குறிப்பிட்டுள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்த முதல் கட்ட வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 25 முதல் நவம்பர் 25-ஆம் தேதிக்குள் டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புக் செய்த யாருக்கும் இன்னும் டெலிவரி செய்யப்படாததால் எப்போது டெலிவரி நடைபெறும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவெரி செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Comments