உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்றங்கள் குறைவு - உள்துறை அமைச்சர் அமித் ஷா
உத்திர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவின் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு குற்றச்செயல்கள் பெருகி விட்டதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவிற்காக சஹரன்பூர் (Saharanpur) வந்த அமித் ஷா, அகிலேஷின் ஆட்சியை விட யோகியின் ஆட்சியில் கொள்ளை சம்பவங்கள் 70 சதவீதமும், கொலை சம்பவங்கள் 30 சதவீதமும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டுமானம், முத்தலாக் ஒழிப்பு சட்டம் என 70 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்து காட்டியதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Comments