மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியாகும் மீத்தேனை குறைக்க புதிய தொழில்நுட்பம்..
கால்நடைகளின் சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் மற்றும் அமோனியா வாயுவை குறைக்க நார்வேயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஐ.நா சுற்றுச் சூழல் திட்டத்தின் தகவல் படி, மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயு, கார்பன் டையாக்ஸைட் வாயுவை விட 10 மடங்கு அதிகமாக வெப்பத்தை உள்ளிழுத்துக்கொள்வதால் புவி வெப்பம் அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சாணத்துடன் செயற்கை முறையில் உருவாக்கப்படும் மின்னலை செலுத்தி, மீத்தேன் மற்றும் அமோனியா வாயுவை குறைப்பதாக N2 Applied என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சாணத்தில் உள்ள 99 சதவீத மீத்தேன் மற்றும் 95 சதவீத அமோனியா குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments