மதுக்கடையைத் திறக்க மக்கள் விரும்பாத போது ஏன் திறக்கிறீர்கள்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி

0 5648
மதுக்கடையைத் திறக்க மக்கள் விரும்பாத போது ஏன் திறக்கிறீர்கள்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை மாவட்டம் கல்லூத்து என்னும் ஊரில், டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை எதிர்த்துத் தொடுத்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள், ஊர் மக்கள் மதுக்கடையைத் திறக்க விரும்பாத போது அங்கு ஏன் மதுக் கடையைத் திறக்கிறீர்கள்? என அரசிடம் வினவினர்.

அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்க முடிவு செய்யப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியெனில் கஞ்சா உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக விற்கப்படுதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதையும் சட்டரீதியாக விற்க நடவடிக்கை எடுப்பீர்களா? என வினவினர்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது வாங்கவும், இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்குச் சென்று மது வாங்கவும் குடிமகன்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், மதுக்கடை திறக்கப்பட்டாலும் ஊர்மக்கள் கட்டுப்பாட்டுடன் அங்குச் செல்லாமல் இருக்க வேண்டும் எனக் கூறினர்.

ஊர் மக்களின் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்கவும், அது குறித்த அறிக்கையை டிசம்பர் 20ஆம் நாள் தாக்கல் செய்யவும், அதுவரை அங்கு டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments