மின்வாரிய ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் அறிவிக்கை வாபஸ்.!

0 2734
மின்வாரிய ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் அறிவிக்கை வாபஸ்.!

துரை மண்டலத்திற்குட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments