சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
2021 - 2022 நிதியாண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களிலேயே தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்பட்டுப் பணிகள் அந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும், இந்த ஆண்டில் டிசம்பர் பிறந்த பின்னும் நிதியை விடுவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிதியைப் பயன்படுத்தித் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து விடுவார்கள் என்றும், கூறியுள்ளார்.
Comments