காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நிலம் தொடர்பான பிரச்சனையில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் அடித்து வீட்டை விட்டு விரட்டி சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டதுடன், வீட்டில் இருந்த பணம், 27சவரன் நகைகளையும் எடுத்துக் கொண்டதாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி, நூர்நிஷா என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், திருவாரூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Comments