புதுக்கோட்டையில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்த மகன்
புதுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த தகவல் கேட்டு மனமுடைந்த மகன், இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கே.ஆர் சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார். திருப்பூரில் பனியன் கம்பனி வைத்துள்ள அவரது மகன் சசிகுமார் , வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார்.
இந்நிலையில், தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த சசிகுமார், அங்கிருந்து தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு 45 நிமிடங்களில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் தென்னங்குடிக்கு புறப்பட்டார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் திடீரென்று ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் பொதுமக்கள் சிலர் ஹெலிகாப்டரை பார்த்துச் சென்றனர்.
Comments