அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7 அன்று நடைபெறும் - அதிமுக தலைமையகம்

0 7046

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் ஏழாம் நாள் நடைபெறும் என அதிமுக தலைமையகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 5 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும், டிசம்பர் 6 மாலை 4 மணி வரை வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 7 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், பதிவாகும் வாக்குகள் மறுநாள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகப் பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments