அஞ்சு பாபி ஜார்ஜுக்கு உலகத் தடகள அமைப்பின் சிறந்த பெண் விருது அறிவிப்பு
உலகத் தடகள அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த பெண் விருது இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ் 2003ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் 6 புள்ளி 7 மீட்டர் நீளந்தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றவர்.
இளம் விளையாட்டு வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களின் திறமையை வளர்த்ததற்காகவும், இந்தியத் தடகளக் கூட்டமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றிப் பாலினச் சமத்துவத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்ததற்காகவும் அவருக்கு உலகத் தடகள அமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு நன்றி என டுவிட்டரில் அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Comments