ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா

0 4446

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி கால்இறுதியில் பெல்ஜியத்தை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

புவனேஸ்வரில் நடந்த ஆட்டத்தில் 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோலாக மாற்றினார்.

மற்றொரு பக்கம் இருமுறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் கோல் அடிக்க பெல்ஜியம் அணி தவறியது.

இறுதியில் 1-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாளை நடக்கும் அரைஇறுதியில் இந்திய அணி, 6 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments