முசாபர்பூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 15 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாக தகவல்

0 3732

பீகார் மாநிலம் முசாபர்புர் அரசு கண் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஏழைகளில் 15 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நபர் மருத்துவக் குழு விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கண் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 65 நோயாளிகள் பார்வை இழந்ததாக கூறப்படும் நிலையில் முழுப் பட்டியலை பெற்று ஒவ்வொருவரின் நலன் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments