பொதுமக்களுக்கு பூஸ்டர் ஷாட்களை செலுத்த அனுமதிக்கும்படி சீரம் இந்தியா நிறுவனம் கோரிக்கை
கொரோனாவின் உருமாறிய புதிய வகையான ஒமிக்ரான் பீதி உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் இந்திய மருந்து தயாரிப்பான சீரம், பூஸ்டர் ஷாட்டுகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு ஆணையத்திடம் கோரி உள்ளது.
கோவிஷீல்ட்டுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று குறிப்பிட்டு கடிதம் எழுதிய சீரம் நிறுவனம் இப்போது பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசிக்கான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான அமைப்பு ஆஸ்ட்ரா ஜெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளை அங்கீகரித்து உள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments