வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!

0 5555

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிதாக பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வர மணிக்கணக்கில் காத்திருத்தல், நீண்ட வரிசைகளில் நின்று சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுதல் என்று பலவகையான சிரமங்களை அவர்கள் சந்திக்க நேரிடுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கின்றனர். ரூபாய் 4 ஆயிரத்து 500 என அதிக விலையில் கொரோனா பரிசோதனைக்கு பணம் செலுத்திய பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

சில வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர 48 மணி நேரம் ஆனதாக தெரிவித்துள்ளனர்.நீண்ட வரிசையில் நிற்கும் பயணிகளால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments