லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என கூறி மோசடி செய்ய முயன்ற இருவர் கைது

0 2631

மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என கூறி மோசடி செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

பழங்காநத்தம் கோவலன் நகரை சேர்ந்த தொழிலதிபரான வெங்கடேசன், மதுரை மேலவெளி வீதி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நண்பர்கள் சிலரை சந்திக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு சொகுசு காரில் வந்த இரண்டு பேர், வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அதில், பணம் எதுவும் இல்லாததால் கையில் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்வதாக கூறி வாங்கி சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வெங்கடேசனை ஏமாற்ற முயன்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த அஜய் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவிசங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments