132 சதவீதத்திற்கும் மேல் டிசம்பரில் மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

0 60260

துவரை இல்லாத வகையில் இந்த டிசம்பர் மாதத்தில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான நீண்ட கால சராசரி அளவை விட, நடப்பாண்டு டிசம்பரில் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் இயல்பாக 18 செண்டி மீட்டர் மழை பெய்யக்கூடும் எனவும், ஆனால், இந்த ஆண்டு, 132சதவீதத்திற்கும் மேல், 24 செண்டி மீட்டர் என்ற அளவில் இயல்பைவிட கூடுதலாக மழை பொழியும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரப்படி கடலின் வெப்பநிலை, Indian ocean dipole எனும் இந்திய பெருங்கடலின் இரு துருவங்களும் தமிழகத்திற்கு மழை தரக்கூடிய சாதகமான நிலையில் உள்ளதால் டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments