ஒமிக்ரான் அச்சுறுத்தல் : வெளிநாட்டு விமான சேவை குறித்து புதிய தகவல்
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு விமானங்களை அனுமதிப்பதற்கான தேதி, மேலும் தள்ளிப் போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில், புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதால், பல்வேறு நாடுகள், வெளிநாட்டு விமானங்களை அனுமதிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை விதித்தன.
இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒமிக்ரான் பரவல் குறித்து கூர்ந்து கவனித்து வருவதாகவும், சர்வதேச விமான சேவையை, மீண்டும் தொடங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments