"பெண்களுக்கான பிரதமரின் திட்டத்தால் பெரியளவில் மாற்றம்"... பெண் பிள்ளைகளை பெற்றுக்கொள்வதில், பெற்றோர் ஆர்வம் : வானதி சீனிவாசன்
பிரதமரின் "பெண்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம்" திட்டம், பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வங்கி கணக்கை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை, 78 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், பெண்களுக்கான சுகாதாரம் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது, என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்டங்கள், பெண்களுக்கான முன்னேற்றத்தை அளித்துள்ளது, என்று தெரிவித்த வானதி சீனவாசன், பெண் பிள்ளைகளை பெற்றுக் கொள்வதில், பெற்றோர் மத்தியில் ஆர்வம் வந்துள்ளது, என்றும் குறிப்பிட்டார்.
"பெண்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம்" திட்டத்தை ஹரியானாவில், கடந்த 2015 ஜனவரியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Comments