வெளிநாடுகளில் இருந்து கடந்த 3 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா இல்லை - சுகாதாரத்துறை

0 3597

கடந்த 3 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 12 மரபணு பகுப்பாய்வு மையங்கள் செயல்படுவதாகவும், ஒமிக்ரான் வைரஸ் குறித்த பகுப்பாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனை முடிவுகள் வர 7 நாட்கள் வரை ஆகும் என்பதால் தொற்று உறுதியானவர்களை விமான நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கென சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை சகல வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments