தாலிபான்களால் கொள்ளையடித்த ஆயுதங்களை, இந்தியாவில் தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தும் பாகிஸ்தான் - ஜெனரல் பங்கஜ் சிங்
தாலிபான்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை இந்தியாவில் தீவிரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
துணை ராணுவப் படைகள் உருவாக்கப்பட்ட 57 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 67 ட்ரோன்கள் வந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த ட்ரோன்களின் அதிர்வெண் மிகவும் சிறியது என்பதால் அதனைக் கண்டறிவது கடினமாக இருப்பதாகக் கூறிய அவர், இத்தகைய ட்ரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுவதாகத் தெரிவித்தார்.
Comments