ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக விமானக் கட்டணங்கள் உயர்வு

0 4375

ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்கான விமானக் கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

ஒமிக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொருத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்சக் கட்டணம் 80 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியிலிருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயணக் கட்டணம் இனி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கும் விமானக்கட்டணம் இரண்டு முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments