எரிமலை வாய்க்குள் புகுந்து வெளியேறிய விமானி... ஓராண்டு தீவிரப் பயிற்சி... சில வினாடிகள் நிகழ்ந்த சாகசம்
தென் அமெரிக்க நாடான சிலியில், விமானி ஒருவர் எரிமலை புகைக்குள் சில வினாடிகள் புகுந்து சாகசம் நிகழ்த்தினார். முன்னாள் விமானியான செபாஸ்டியன் அல்வாரெஸ் டந்த ஓராண்டாக காற்றின் அழுத்தம் மற்றும் வேகத்துக்கு ஏற்ப எரிமலைக்குள் புகுந்து வெளியேறத் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
விங் சூட் அணிந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து குதித்த அல்வாரெஸ், 200 மீட்டர விட்டளவு கொண்ட வில்லாரிக்கா எரிமலையின் வாய்க்குள் 32 அடி ஆழம் வரை சென்று, பின்னர் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேறினார்.
ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த சாகசத்தின் மூலம் எரிமலைக்குள் புகுந்து வெளியேறிய முதல் நபர் என்ற சாதனையை அல்வாரெஸ் படைத்தார்.
Comments