தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் - விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த, ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவிலுள்ள Xenobot-களில் சூப்பர் கம்பியூட்டர் மூலம் செயற்கை நுண்ணறிவு புகுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதை வெர்மாண்ட் டவ்ட்ஸ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.Xenobot-களில் இணைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு புரோகிராம் மூலம், அணு கழிவுகளை நீக்குவது, கடலில் கலந்துள்ள நுண் நெகிழிகளை அகற்றுவது, மனிதர்களின் ரத்த நாளங்களுக்குள் புகுந்து நோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த Xenobot-கள் புதிய ஸ்டெம் செல்களை தானாக உள் இழுத்து இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
Comments