கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மணலி புதுநகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதிக்குள் நான்காவது முறையாக ஆற்று நீர் புகுந்து, குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வெள்ள சேத பகுதிகளை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டார்.
மணலி புதுநகர் அடுத்த எழில் நகர் பகுதியில் அதிகளவில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் படகு மூலம் வெளியேறினர்.
மணலி அருகே விச்சூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையை மீறி வெளியேறும் வெள்ளநீரானது ஊருக்குள் புகுந்தது. கரைபுரண்டோடும் வெள்ளநீரில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் விளையாடினர்.
Comments