70 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது திடீரென மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்ததில் 9 பேர் படுகாயம்
புதுக்கோட்டையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியின்போது, திடீரென மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு ராஜவீதியில் இருந்த அந்தக் கட்டிடத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த கடை காலி செய்யப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக கட்டிடம் பயன்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருந்துள்ளது.
இந்த நிலையில் அந்த இடத்தை விலைக்கு வாங்கிய ஒரு நபர், அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டத்துடன் பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக ஒரு குழு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொடர் கனமழையால் கட்டிடம் ஈரமாகி, அதன் வலுவை இழந்திருக்கிறது.
காலை வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மொத்த கட்டிடமும் சரிந்துள்ளது. காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments