142 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்.. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி..!
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம், 142 அடியை எட்டியுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர் தேக்க அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,100 கன அடி வீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதில், தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,300 கன அடியும், கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 6,600 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
கேரள பகுதிக்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால்,இடுக்கி மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments