புயல் சின்னம் - தமிழகத்திற்கு பாதிப்பில்லை.. தமிழகத்தில் மழை குறைய தொடங்கும்..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதால் தமிழகத்தில் மழை பொழிவதாக கூறினார்.
வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீனவர்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் வரும் நாட்களில் மழை குறையத் தொடங்கும் எனவும் புவியரசன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 65 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது எனவும், இது இயல்பு அளவு 36 செண்டி மீட்டரை விட 83சதவீதம் அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments