ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பராக் அகர்வால் நியமனம்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த அகர்வால், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 2011ல் ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அவருக்கு, தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், பராக் அகர்வால் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பதவியை ராஜினாமா செய்துள்ள டோர்சி, அகர்வாலை ட்விட்டர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்திருப்பது சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார். அந்நிறுவனத்தை விட்டு டோர்சி வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments