வேளாண் சட்ட வாபஸ் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தங்களது போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணியை விவசாயிகள் கைவிட்டனர்.
ஆனால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிலுவையில் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு எழுத்துபூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடந்த 21 ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு என்ன பதில் கிடைக்கிறது என்பதை பொறுத்து வரும் 4 ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments