ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இதுவரை ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், புதிய வைரசின் தொற்றுத் தன்மை தொடர்பாகவும், அதன் ஆபத்து தொடர்பாகவும் தற்போது வரை நிச்சயமற்ற நிலையே உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரான் வைரசின் பரவல் தன்மை, தடுப்பூசிகளின் திறன், பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய பல வாரங்கள் ஆகலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Comments