இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா

0 6251

ந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 5ஆம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 9 விக்கெட்டுகளுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் போட்டி டிரா ஆனது.

தனது முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments